Quotes For Life

வாழ்வின் ரகசியம்

சிரியுங்கள்   — அது இதயத்தின் இசை!
சிந்தியுங்கள் — அது இளமையின் ரகசியம்!
படியுங்கள்    — அது அறிவின் ஊற்று !
நட்பு பாராட்டுங்கள் — அது மகிழ்ச்சியின் வழி!
தியானத்தை உணருங்கள் — அது தெளிவின் வழி !
உழைத்துப் பாருங்கள் — அது வெற்றியின் வழி !

   

வாழ்க்கையில் வருவது இரண்டு

வருவதும் போவதும் இரண்டு :: இன்பம், துன்பம்
வந்தால் போகாதது இரண்டு :: புகழ், பழி
போனால் வராதது இரண்டு :: மானம், உயிர்
தானாக வருவது இரண்டு :: இளமை, மூப்பு
நம்முடன் வருவது இரண்டு :: பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டு :: ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டு :: பசி, தாகம்
அழிவை தருவது இரண்டு :: பொறாமை, கோபம்
நம்மால் பிரிக்க் முடியாதது இரண்டு :: பந்தம், பாசம்
எல்லாருக்கும் சமமானது இரண்டு :: பிறப்பு, இறப்பு

       

உயர்வுக்கு வழி

வணங்கவேண்டிய தெய்வம் — தாய், தந்தை.
மிக மிக நல்ல நாள் — இன்று
மிகப்பெரிய தேவை — நம்பிக்கை, நேரம்.
மிகப் பெரிய வெகுமதி — மன்னிப்பு.
செய்யக் கூடாதது — நம்பிக்கை, துரோகம்
மிகவும் சுலபமானது — குற்றம் சொல்வது
மிகவும் வேண்டியது — பணிவும், பண்பும்
மிகப்பெரிய நோய் — பேராசை
உயர்வுக்கு வழி — உழைப்பு
செய்யக்கூடியது — உதவி
கீழ்த்தரமான விசயம் — பொறாமை
திரும்பவராதது — வாழ்ந்த வாழ்க்கை
மறக்ககூடாதது — நன்றி.

   

வெற்றியின் ரகசியம்

அன்பு காட்டு — ஆனால் அடிமையாகி விடாதே
இரக்கம் காட்டு — ஆனால் ஏமாந்து விடாதே
தர்மம் செய் — ஆனால் ஆண்டியாகிவிடாதே
சுறுசுறுப்பாய் இரு — ஆனால் பதட்டப்படாதே
பணிவாய் இரு — ஆனால் கோழையாய் இராதே
கண்டிப்பாய் இரு — ஆனால் கோபப்படாதே
சிக்கனமாய் இரு — ஆனால் கஞ்சனாய் இராதே
பொருளை தேடு — ஆனால் பேராசைப்படாதே
உழைப்பை நம்பு — ஆனால் கடவுளை மறந்துவிடாதே

       

 

– L.Lakshmi KTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *